ADDED : ஜூலை 22, 2024 05:41 AM

நத்தம்: -நத்தம் குட்டுப்பட்டி கிராமத்திலிருந்து மலை உச்சியில் பெரியமலையூர், பள்ளத்துக்காடு, வலசு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த மலைகிராமங்களுக்கு செல்லும் வழியில் உள்ள கரந்தமலை அருவி. இங்கு சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மலையிலிருந்து அடிவாரத்திற்கு செல்லும் சிற்றருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது. உள்ளூர் கிராமவாசிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்த அருவியானது நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் ரோட்டில் குட்டுப்பட்டி கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் உள்ளது.