/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொத்தயத்தில் சிட்கோ கோரி கிராம மக்கள் மனு கொத்தயத்தில் சிட்கோ கோரி கிராம மக்கள் மனு
கொத்தயத்தில் சிட்கோ கோரி கிராம மக்கள் மனு
கொத்தயத்தில் சிட்கோ கோரி கிராம மக்கள் மனு
கொத்தயத்தில் சிட்கோ கோரி கிராம மக்கள் மனு
ADDED : ஜூன் 23, 2024 04:33 AM

ஒட்டன்சத்திரம்: கொத்தயத்தில் சிட்கோ அமைக்க வலியுறுத்தி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே கொத்தையம் ஊராட்சியில் உள்ள வெடிக்காரன் வலசு கிராமத்தில் அரளிக்குத்து குளம் உள்ளது.
அரசின் பதிவேடுகளில் தரிசு நிலம் என அறிவிக்கப்பட்ட இந்த குளத்தில் 70 ஏக்கரில் சிட்கோ என்ற தொழிற்பேட்டை அமைக்க அரசு அறிவித்துள்ளது.
இப்பகுதி விவசாயிகள் சிட்கோ அமைத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் சுற்று கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொத்தயத்தில் சிட்கோ அமைக்க வேண்டும் கோரி ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர்.
தி.மு.க., திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன் தர்மராஜ் தங்கராஜ் சுப்பிரமணி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சிவமணி உடன் இருந்தனர்.