ADDED : ஜூன் 23, 2024 04:34 AM

பழநி: பழநி முருகன் கோயிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் , சிறப்பு பூஜைகள் நடந்தன.
புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் உள் மண்டபத்தில் பூஜை நடைபெற்றது. சாயரட்சை பூஜையில் திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமிக்கு அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
கண்பத் கிராண்ட் ஹரிஹர முத்துஅய்யர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முருகன் கோயிலில் அருணகிரிநாதர் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.