/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி
ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி
ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி
ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி

மின்தடையால் அவதி
தில்லைநாதன், சுற்றுலா வழிகாட்டி: குடிநீர் பிரச்னை நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது. காட்டுமாடு, தெரு நாய் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பஞ்சத்திற்கு வெளியில் இருந்து தான் குடிநீர் கொண்டு வரும் அவலம் உள்ளது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அவதி அடைகிறோம். 10 தினங்களுக்கு ஒரு முறை குப்பை அகற்றும் அவலம் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பறை , குடிநீர் வசதி இல்லாத நிலை உள்ளது. சுற்றுலா முக்கியத்துவமான வட்டக்கானலில் சுற்றுலா மேம்படுத்த வேண்டும். குப்பை சரிவர அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது.
40 ஆண்டாக தவிப்பு
பாலாஜி, வியாபாரி : பசுமை பள்ளத்தாக்கு ஹில்டாப் ரோடு சேதம் அடைந்து குண்டு குழியுமாக உள்ளது.
அனுமதியின்றி காட்டேஜ்கள்
டேவிட் ,பசுமை பள்ளத்தாக்கு: வட்டகானல் பசுமை பள்ளத்தாக்கு இடையே தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. பாம்பார்புரம் ரோடு சேதமடைந்து பள்ளம் மேடாக உள்ளது.
நகராட்சி மூலம் நடவடிக்கை
முகமதுஇப்ராஹிம், (தி.மு.க.,) கவுன்சிலர் : இதுவரை ரூ.12 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. கீழ் குண்டாறு குடிநீர் திட்டம் திருவள்ளுவர் நகர், வட்டக்கானல், பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் நீட்டிக்கப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன. வட்டகானல் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அதில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.