Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நகராட்சியாக உயர்கிறது வத்தலக்குண்டு

நகராட்சியாக உயர்கிறது வத்தலக்குண்டு

நகராட்சியாக உயர்கிறது வத்தலக்குண்டு

நகராட்சியாக உயர்கிறது வத்தலக்குண்டு

ADDED : ஜூன் 29, 2024 04:59 AM


Google News
கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்க வாய்ப்பு

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து கட்டமைப்பு வசதிகள் கூடுதலாக கிடைக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் வேடசந்துார், சின்னாளப்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட சிறப்பு நிலை பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்த இருப்பதாக 10 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் புதிய மாவட்டங்கள் உருவாக்கியதால் உள்ளாட்சி நிர்வாகங்கள் தரம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் வத்தலக்குண்டை சேர்ந்த அமைச்சர் பெரியசாமி இவ்வூரை நகராட்சியாக தர உயர்த்த முயற்சி எடுத்து வந்தார்.அதன்படி வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வதாகவும் அதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நகராட்சியாக தரம் உயர்வதன் மூலம் ரோடு, சாக்கடை, தெருவிளக்கு ஆகியவற்றிற்கு தனி தனி துறைகள் உருவாக்கப்பட்டு கூடுதல் அலுவலர்கள், அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இதன் மூலம் வத்தலக்குண்டில் கட்டமைப்பு வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும்.

மருது ஆறுமுகம், ம. தி.மு.க., ஒன்றிய செயலாளர் வத்தலக்குண்டு: நகராட்சியாவது சந்தோஷமே. கொடைக்கானல் அடிவாரத்தில் மலைப்பகுதி மக்களுக்கு நல்ல வசதிகளை கொண்ட ஊராக அமைந்து விடும். நகராட்சியாக மாற்றுவதற்கு முன் அதன் உள்கட்டை அமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக ரோடு ,சாக்கடை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us