/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல் அணி வெற்றி 16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல் அணி வெற்றி
16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல் அணி வெற்றி
16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல் அணி வெற்றி
16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல் அணி வெற்றி
ADDED : ஜூலை 28, 2024 07:16 AM
திண்டுக்கல்: 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஜுலை 22ல் துவங்கியது. இப்போட்டிகள் வேலுார், ராணிபேட்டை, சேலம், காரைக்குடி, திருச்சி, துாத்துக்குடி, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் நடைபெறுகிறது. 37 மாவட்ட அணிகள் விளையாடுகின்றன. இதன் முதல் சுற்று போட்டிகள் 50 ஓவர்கள் அடிப்படையில் ஒரு நாள் போட்டிகளாக திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.ஏ., ஸ்ரீவீ, ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடந்தன. இந்த போட்டிகளில் திண்டுக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, அரியலுார் மாவட்ட அணிகள் பங்கு பெற்றன .
ஜூலை 22ல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் , 249 ரன்கள் எடுத்தது. சஞ்சய் பாலாஜி அதிகபட்சமாக 152 பந்து 13 போர் , 4 சிக்ஸர்களுடன் 124 ரன்களும் (நாட் அவுட்), ேஹமந்த் 45 ரன்களும் எடுத்தனர். அஸ்வின்குமார் 68 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த புதுக்கோட்டை அணி 39 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை தழுவியது. முகமது அஷ்வாக், தீபன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். திண்டுக்கல் அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் நீலகிரி அணி 28.3 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தது. பூர்வீண் 34, முகமது ரசீன் 35 ரன்கள் எடுத்தனர். அஸ்வத் 26 ரன்கள் கொடுத்து 5, சூர்ய பிரகாஷ் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். சேசிங் செய்த அரியலுார் அணி 29.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிவசேரன் 35 ரன்கள் எடுத்தார்.
* 23 ல் ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த புதுக்கோட்டை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. கவுசிக் 63, விஜய்பாலாஜி 33, கார்த்திகேயன் 35 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த அரியலுார் அணி 29 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 85 ரன்கள் எடுத்தது. விக்னேஷ் 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் புதுக்கோட்டை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மற்றொரு போட்டியில் நீலகிரி 50 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. முகமது ரசீன் 66, கிரிஸ்பின் சாமுவேல் 44 ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் அணி 41.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தர்ஷ்வின் 61 (நாட் அவுட்) , சசிகுமார் 40 ரன்கள் எடுத்தனர்.
24ல் பிஸ்.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த புதுக்கோட்டை அணி 18.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது. கார்த்திகேயன் 36, தருண் ராம் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த நீலகிரி அணி 23 ஓவர்களில் 10 விக்கெட், 63 ரன்கள் எடுத்தது. அஸ்வின்குமார் 3, விக்னேஷ் 5 விக்கெட் எடுத்தனர். இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் புதுக்கோட்டை அணி வென்றது.
மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழந்து 325 ரன்கள் குவித்தது.
ெஹமந்த் 36, பிராஜன் 39, சசிகுமார் 65, தீபன் 113 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர். அஸ்வத் 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த அரியலுார் அணி 38.5 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. தர்ஷ்வின் 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.