/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேசிய விருதுக்கு தேர்வான திண்டுக்கல் தொழிலாளி தேசிய விருதுக்கு தேர்வான திண்டுக்கல் தொழிலாளி
தேசிய விருதுக்கு தேர்வான திண்டுக்கல் தொழிலாளி
தேசிய விருதுக்கு தேர்வான திண்டுக்கல் தொழிலாளி
தேசிய விருதுக்கு தேர்வான திண்டுக்கல் தொழிலாளி
ADDED : ஜூலை 28, 2024 07:16 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லை சேர்ந்த கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன்.
நல்லாம்பட்டி டி.எல்.ஹெச் ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். பருத்தி சேலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர் 2023ம் ஆண்டுக்கான கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இவர் உட்பட 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் ஆக.7ல் நடக்கும் தேசிய கைத்தறி தின விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.