/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கலங்கலான தண்ணீர்: கழிவுகள் குவியும் மயானம்; கதறும் சின்னாளபட்டி மக்கள் கலங்கலான தண்ணீர்: கழிவுகள் குவியும் மயானம்; கதறும் சின்னாளபட்டி மக்கள்
கலங்கலான தண்ணீர்: கழிவுகள் குவியும் மயானம்; கதறும் சின்னாளபட்டி மக்கள்
கலங்கலான தண்ணீர்: கழிவுகள் குவியும் மயானம்; கதறும் சின்னாளபட்டி மக்கள்
கலங்கலான தண்ணீர்: கழிவுகள் குவியும் மயானம்; கதறும் சின்னாளபட்டி மக்கள்

மாசு கலந்த தண்ணீர்
ராஜ்குமார், பா.ஜ., மண்டல் பொதுச்செயலாளர், சின்னாளபட்டி : பல வார்டுகளில் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் நடக்கிறது. 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே வழங்குவதால் பெரும்பாலான குடும்பங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. அவ்வப்போது மாசு கலந்த நிலையில் தண்ணீர் வருகிறது. சில நேரங்களில் செம்மண் கரைத்த கூழ் போன்று தண்ணீர் வருவதால் சுகாதாரம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
விஷ ஈ, கொசு உற்பத்தி ஜோர்
ஜெயராமன் ,கூலித்தொழிலாளி, சின்னாளபட்டி : திடக்கழிவு மேலாண்மையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். அஞ்சுகம் காலனி உரக்கிடங்கிற்கு பெரும்பாலான பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் கொண்டு செல்லப்படுவதில்லை. துப்புரவு ஆய்வாளர் பணியிடத்தை குறைத்துள்ள சூழலில் தொய்வு அதிகரித்துள்ளது. வள்ளலார் நகர் கழுத்து மாரியம்மன் கோயில் தெருவில் குப்பை குவிக்கின்றனர். ரோட்டோரங்களில் குவித்து எரியூட்டுகின்றனர்.விஷ ஈ, கொசு உற்பத்தி அதிகரிப்பு தாராளமாகி விட்டது.
கண்காணிப்பு இல்லை
நாகஜோதி ,குடும்பத் தலைவி, திரு.வி.க. நகர் : வி.எம்.எஸ் காலனி, திண்டுக்கல் பைபாஸ் ரோடு உள்ளிட்ட மயானங்களில் பாலிதீன் கழிவுகளை குவித்து எரிப்பது, தொடரும் அடர் புகை மண்டலம், தொற்று பரவல் போன்ற சுகாதாரக்கேடுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். கால்நடைகள் பாலிதீன் கழிவுகளை உண்பதால் உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் தண்ணீர் வினியோக குளறு படிகளுக்கு தீர்வு கிடைக்க வில்லை. மாசு கலந்த தண்ணீர் வினியோகத்தால் குழந்தைகளை பராமரிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகிறது.