/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள் சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு ஆயுள்
ADDED : ஜூலை 30, 2024 10:53 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி மானூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 24. இவர் 2022-ல் அதே பகுதியைச்சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை செய்தார். அவருக்கு உதவியாக அவரது தந்தை சங்கரும் 60, இருந்துள்ளார். பழநி அனைத்து மகளிர் போலீசார்,போக்சோ சட்டத்தில் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சரண், குற்றவாளியான விக்னேஷுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2.20 லட்சம் அபராதம், சங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.