/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ' கொடை ' யில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் ' கொடை ' யில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
' கொடை ' யில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
' கொடை ' யில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
' கொடை ' யில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ADDED : ஜூன் 30, 2024 02:36 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் நிலவிய இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானலில் நேற்று காலை பளிச்சிட்ட வெயில், மதியம் சாரல் மழை , நகரை சூழ்ந்த பனிமூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்க குளு ,குளு கொடைக்கானல் சில்லிட்டது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நகரை சூழ்ந்த பனி மூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. அவ்வப்போது தரை இறங்கிய மேக கூட்டம் ரம்மியமாக காட்சியளித்தது.