/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வடமதுரை கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம் வடமதுரை கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்
வடமதுரை கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்
வடமதுரை கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்
வடமதுரை கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்
ADDED : ஜூலை 20, 2024 12:55 AM

வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்றிரவு திருக்கல்யாணம் நடந்த நிலையில் நாளை (ஜூலை 21) மாலை தேரோட்டம் நடக்கிறது.
ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா ஜூலை 13ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
திருவிழா முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்றிரவு சவுந்தரவல்லி தாயார் சன்னிதியில் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஜூலை 21) நடக்கும் நிலையில் நாளை காலை 8:00 மணிக்கு கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமம், மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் சுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது .
இரவு 8:00 மணிக்கு சுவாமி தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பாக காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் கனகலட்சுமி, தக்கார் தங்கலதா, ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.