/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார் ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார்
ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார்
ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார்
ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார்
ADDED : ஜூலை 20, 2024 12:55 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளர் சரவணன் மீது ,10 நாட்கள் பின் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் நெட்டுத் தெருவை சேர்ந்தவர் சரவணன்35. திண்டுக்கல் மாநகராட்சி கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளராக வேலை செய்கிறார். மாநகராட்சிக்கு மக்கள் செலுத்திய வரிப்பணத்தை வங்கியில் செலுத்தாமல் 2023 ஜூனிலிருந்து 2024 வரை கையாடல் செய்துள்ளார். இதை கண்டுபிடித்த மாநகராட்சி அலுவலர்கள் அவர் பணியாற்றிய காலங்களில் உள்ள கணக்குப் பிரிவு ஆவணங்களை சரிபார்த்தனர். வரி பணம் ரூ.4.66 கோடி கையாடல் செய்த தகவல் வெளியானது. கமிஷனர் ரவிச்சந்திரன் சரவணன்,இதை கவனிக்காத கண்காணிப்பாளர் சாந்தி,மற்றொரு இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.
சரவணன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தது. 10 நாட்களாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
10 நாளுக்கு பின் நேற்று சரவணன் மீது வழக்கு பதிவு செய்தனர். ''விசாரணை முழுமையாக நடத்தப்பட்டு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதோ அனைவரும் கைது செய்யப்படுவர் '' என எஸ்.பி.,பிரதீப் தெரிவித்தார்.