Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டில் சாய்ந்த மரம் மக்களே முன்வந்து அகற்றம்

ரோட்டில் சாய்ந்த மரம் மக்களே முன்வந்து அகற்றம்

ரோட்டில் சாய்ந்த மரம் மக்களே முன்வந்து அகற்றம்

ரோட்டில் சாய்ந்த மரம் மக்களே முன்வந்து அகற்றம்

ADDED : ஜூலை 24, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
தாண்டிக்குடி : தாண்டிக்குடி வத்தலகுண்டு ரோட்டில் மரம் விழுந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் கண்டுக்காத நிலையில் பொது மக்களே அகற்றினர்.

மலைப்பகுதியில் ஒரு வாரமாக சூறைக்காற்று வீசி வருகிறது. ஆங்காங்கே ரோட்டில் மரம் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நேற்று அதிகாலை வத்தலகுண்டு தாண்டிக்குடி ரோட்டில் கானல்காடு பகுதியில் ராட்சத மரம் காற்றிற்கு விழுந்தது.

நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தும் மரத்தை அகற்ற முன்வரவில்லை. பொதுமக்கள் அருகில் உள்ள கிராமத்தினர் உதவியுடன் மரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மரம் விழுந்ததால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மரத்தை அகற்ற பொதுமக்கள் அனைத்து வாகன ஓட்டிகளிடம் ரூ. 50 வசூலித்து மரத்தை அகற்றிய அவலம் ஏற்பட்டது. இந்த ரோடு ஆத்துார் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தவரை இயற்கை இடர்பாடுகளின் போது மரங்கள் விழுந்தால் அகற்றப்பட்ட நிலையில் கொடைக்கானல் கோட்டத்திற்கு மாறியபின் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கையாள்கின்றனர். இறுதி வரை மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறை வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us