Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மெல்ல மெல்ல மேலோங்கும் ஹேண்ட்பால்: ஆர்வத்தால் அதிகரிக்கும் வீரர்கள் எண்ணிக்கை

மெல்ல மெல்ல மேலோங்கும் ஹேண்ட்பால்: ஆர்வத்தால் அதிகரிக்கும் வீரர்கள் எண்ணிக்கை

மெல்ல மெல்ல மேலோங்கும் ஹேண்ட்பால்: ஆர்வத்தால் அதிகரிக்கும் வீரர்கள் எண்ணிக்கை

மெல்ல மெல்ல மேலோங்கும் ஹேண்ட்பால்: ஆர்வத்தால் அதிகரிக்கும் வீரர்கள் எண்ணிக்கை

UPDATED : ஜூலை 21, 2024 10:13 AMADDED : ஜூலை 21, 2024 05:16 AM


Google News
Latest Tamil News

திண்டுக்கல்


இணைய உலகில் இளைஞர்கள் பலர் மூழ்கி இருந்தாலும் விளையாட்டில் மட்டும் எப்போதுமே ஆர்வமாக உள்ளனர். அரசு தரப்பிலும் விளையாட்டிற்கு பல்வேறு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், மனமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் விளையாட்டு மீதான ஆர்வம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மட்டுமல்லாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வந்து விட்டது. இது மட்டுமல்லாது விளையாட பல்வேறு மாவட்டங்கள்,

மாநிலங்கள் செல்வதால் புதிய அனுபவம் ஏற்படுவதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அந்தவகையில் மெல்ல மேலோங்கும் ேஹண்ட்பால் இன்று மாணவர்கள், வீரர்களிடையே அதிக ஆர்வத்தை வளர்த்து வருகிறது .

இதை ஊக்குவிக்கும் விதமாக மாநில அளவிலான ஆண்களுக்கான ேஹண்ட்பால் போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தின . இந்த போட்டிகள் குறித்து சங்கத்தினர், விளையாட்டு வீரர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் சில இதோ....

கால்பந்திற்கு இணையான ேஹண்ட்பால்


ராஜசேகர், மாநில செயலாளர் , தமிழ்நாடு ேஹண்ட்பால் சங்கம் : ேஹண்ட்பால் என்பது ஒலிம்பிக் அளவிலான விளையாட்டு. உலகளவில் கால்பந்திற்கு இணையாக ஐரோப்பிய நாடுகளில் இந்த விளையாட்டு கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இந்த விளையாட்டை வளர்க்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம். அதற்காக தமிழகத்தில் ேஹண்ட்பால் சங்கம் மூலமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடத்துவது மட்டுமல்லாது வயது வாரியாகவும் போட்டிகளை் நடத்தி மாணவர்கள் மத்தியில் ேஹண்ட்பால் விளையாட்டினை கொண்டு செல்கிறோம். மாவட்ட வாரியாகவும் பல்வேறு போட்டிகள் நடத்துவது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லுாரிகளிலும் அரசின் ஒத்துழைப்போடு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த விளையாட்டு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாடக்கூடியது என்பதால் அதனை அதிகப்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வும் அவசியம்


துரை, தலைவர், தமிழ்நாடு ேஹண்ட்பால் சங்கம் : தமிழ்நாடு ேஹண்ட் பால் சங்கம், திண்டுக்கல் மாவட்ட ேஹண்ட்பால் சங்கம்,ஜி.டி.என்., கல்லுாரி இணைந்து நடத்திய ஆண்களுக்கான மாநில அளவிலான ேஹண்ட்பால் போட்டியில் 38 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன . போட்டிகளில் வென்ற அணிகளின் வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்ய உள்ளோம். சிறந்த வீரர்கள் 25 பேரை அடையாளம் கண்டு அவர்களை தேசிய போட்டிக்கு தயார் செய்வோம். உலகின் வேகமான விளையாட்டில் ஒன்றான இந்த விளையாட்டை மேம்படுத்த கூடுதல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். போதிய விழிப்புணர்வும் அவசியமாகிறது .

பள்ளிகளில் தேவை விளையாட்டரங்கம்


வீரேஷ்குமார், பயிற்சியாளர், நாமக்கல் : பள்ளி மாணவர்கள் ஆர்வமாக வருகின்றனர். வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் அதிகமானோர் விளையாட்டில் கவனம் செலுத்துவர். இதனால், ேஹண்ட்பால் விளையாட்டும் மேம்படும். பல்வேறு மாவட்டங்களில் நடுவர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. அவர்கள் மூலம் மாணவர்களை விளையாட்டிற்கு கொண்டு வருகிறோம். பெண்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அரசின் விளையாட்டுத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை வாயிலாகவும் தற்போது முனைப்பு காட்டப்படுகிறது. ேஹண்ட்பால் விளையாட்டிற்கு தேவையான உள்விளையாட்டரங்கம், உபகரணங்கள் போன்றவை ஏற்படுத்திக் கொடுத்தால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

வழிகாட்டினால் அதிக வீரர்கள் உருவாகுவர்


கலைச்செல்வன், கல்லுாரி மாணவர், கடலுார் : சிறு வயதிலிருந்தே ேஹண்ட் பால் மீது தனி ஆர்வம் இருந்ததால் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று வருகிறேன். குறிப்பாக தமிழகம் முழுவதும் அதிகமான வீர்ரகள் உள்ளனர். அவர்களுக்கு பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பற்றாக்குறைகள் உள்ளன. அதை சரிசெய்து வழிகாட்டினால் பலர் உருவாகுவர்.

தேவையாகிறது முக்கியத்துவம்


தினேஷ், வீரர், மதுரை : 10 ஆண்டுக்கு முன்பே இதே கல்லுாரியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தற்போது தென் மண்டல போலீஸ் அணிக்காக விளையாடி வருகிறேன். இந்த விளையாட்டினால் தான் எனக்கு போலீஸ் வேலையே கிடைத்தது. இதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிரிக்கெட், கால்பந்து போன்று ேஹண்ட் பால் போட்டிகளுக்கு ஊடக வெளிச்சம் உட்பட போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. மாநில, தேசிய அளவிலான போட்டிகள் நடந்தால் கூட வெளியே தெரிவதில்லை. உள்ளூர் முதல் மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளை வெளியே தெரியும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us