/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அரசு பள்ளியை சோலையாக்கும் லயன்ஸ் சங்கத்தினர் அரசு பள்ளியை சோலையாக்கும் லயன்ஸ் சங்கத்தினர்
அரசு பள்ளியை சோலையாக்கும் லயன்ஸ் சங்கத்தினர்
அரசு பள்ளியை சோலையாக்கும் லயன்ஸ் சங்கத்தினர்
அரசு பள்ளியை சோலையாக்கும் லயன்ஸ் சங்கத்தினர்

பறவைகளின் வாழ்விடமாகும்
எம்.வேல்முருகன், லயன்ஸ் வட்டார தலைவர், திண்டுக்கல்: இப்பள்ளியில் நீண்ட காலம் ஆசிரியராக பணிபுரிவதால் லயன்ஸ் சங்கம் மூலம் அதிகளவில் இங்கு மரங்களை வளர்க்க முயற்சி எடுத்தேன். 2018ல் மரக்கன்றுகள் நட்டபோது சுற்றுச்சுவரின்றி இருந்ததால் பாதி மரக்கன்றுகள் அழிந்தது. தற்போது பள்ளியை சுற்றிலும் 530 மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சுவர், கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடுகளால் பாதிப்பு ஏற்படாது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் வேல்வார்கோட்டை பள்ளி மரங்களால் சூழப்பட்ட பசுமையான பள்ளியாக மாறும். நடவு செய்தவற்றில் காய்ந்து போகும் மரக்கன்றுகளுக்கு மாற்றாக புதிய கன்றுகள் நடவு செய்வோம்.
-மாணவர்கள் ஆர்வம்
ஆர்.ராமலிங்கம், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, வேல்வார்கோட்டை: மாணவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மரங்களுக்கு நீருற்றி வளர்ப்பதில் ஆர்வமுடன் உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பயன் தெரிவதால் தங்களது வீடு, தோட்டங்களிலும் மரங்கள் வளர்க்கும் எண்ணம் அதிகரிக்கும். பள்ளி மரங்களை வளர்க்க சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தும் வாய்ப்புகளை முயற்சிக்கிறோம். ஒரு மரக்கன்றை முதல் 3 ஆண்டுகளுக்கு பராமரித்து வளர்த்துவிட்டாலே போதும்.