/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிரேக் பிடிக்காத அரசு பஸ் கடைக்குள் புகுந்தது பிரேக் பிடிக்காத அரசு பஸ் கடைக்குள் புகுந்தது
பிரேக் பிடிக்காத அரசு பஸ் கடைக்குள் புகுந்தது
பிரேக் பிடிக்காத அரசு பஸ் கடைக்குள் புகுந்தது
பிரேக் பிடிக்காத அரசு பஸ் கடைக்குள் புகுந்தது
ADDED : ஜூன் 10, 2024 11:51 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று மதியம் 1:45 மணிக்கு, தேனிக்கு அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் பழனிசாமி பஸ்சை ஓட்டினார். பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த போது, பஸ்சில் 'பிரேக்' பிடிக்கவில்லை.
கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரோட்டோர கடைகளுக்குள் புகுந்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து, டிரைவர் காயமடைந்தார். ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு டூ - வீலர்கள் மீது பஸ் மோதியதில் சேதமாயின.
விபத்தில் சிக்கிய பஸ், ரோட்டின் குறுக்காக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.