ரோடுகளில் தேங்கும் மழைநீரால் அவதி
ரோடுகளில் தேங்கும் மழைநீரால் அவதி
ரோடுகளில் தேங்கும் மழைநீரால் அவதி
ADDED : ஜூன் 03, 2024 04:11 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் தாழ்வான ரோடுகளில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
சுற்றுலா நகரான கொடைக்கானலில் கோக்கர்ஸ்வாக் பாம்பார்புரம் ரோடு, கொடைக்கானல் ஏரி சாலை சந்திப்பு, ஏரி சாலை, நாயுடுபுரம் டிப்போ, அண்ணா சாலை உள்ளிட்ட ரோடுகளில் கனமழை தருணங்களில் தண்ணீர் குளம் போல் தேங்குகின்றன. மழை நீர் வடிந்து ஓடும் வகையில் பாலங்கள் அமைத்த போதும் அவற்றில் தண்ணீர் முறையாக செல்லாது குளம் போல் தேங்குகிறது. இப்பகுதியில் தண்ணீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு கொசு உற்பத்தியும் நடக்கிறது. நகரில் இதுபோன்ற நிலையால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.