ADDED : ஜூன் 03, 2024 04:12 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாஸ் லைன் சங்கம், திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஸ்ரீ வாசவி மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து ஸ்ரீ வாசவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாஸ் லைன் சங்க தலைவர் சிவசாமி சண்முகம் தலைமை வகித்தார்.
செயலாளர் வெற்றிச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். 300-க்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
60 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், வாசவி மெட்ரிகுலேஷன் பள்ளி தலைவர் ஸ்ரீதர் , அ.தி.மு.க., பிரமுகர் பாரதி முருகன, சுபாஷ் ரெடிமேட்உரிமையாளர் மகேஷ்குமார், எல்.கே. டி. கண்ணன பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் சிவசண்முகம், பொருளாளர் வெற்றி செல்வன் , பொருளாளர் ஜான்பால் செய்தனர்.