/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மனப்பாடம் செய்வதை விட புரிந்து படித்தாலே வெற்றி நீட் தேர்வில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள் பெருமிதம் மனப்பாடம் செய்வதை விட புரிந்து படித்தாலே வெற்றி நீட் தேர்வில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள் பெருமிதம்
மனப்பாடம் செய்வதை விட புரிந்து படித்தாலே வெற்றி நீட் தேர்வில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள் பெருமிதம்
மனப்பாடம் செய்வதை விட புரிந்து படித்தாலே வெற்றி நீட் தேர்வில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள் பெருமிதம்
மனப்பாடம் செய்வதை விட புரிந்து படித்தாலே வெற்றி நீட் தேர்வில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள் பெருமிதம்
ADDED : ஜூன் 07, 2024 06:59 AM

திண்டுக்கல்: 'மனப்பாடம் செய்வதை விட புரிந்து படித்தாலே எளிதில் வெற்றி பெறலாம் ' என நீட் தேர்வில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள் கூறினர்.
அரசு ,தனியார் மருத்துவக்கல்லுாரிகளில் மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வு மே 5ல் நடந்தது. இதன் முடிவு நேற்று முன் தினம் வெளியானது.
இதில் சாதித்த இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரதீபா கூறியதாவது: நான் 12ம் வகுப்பு படிக்கும் போதே என் பள்ளி ஆசிரியர்கள் சனி,ஞாயிறு கிழமைகளில் எனக்கு நீட் தேர்வு குறித்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்காக எங்கள் ஆசிரியர்களே தனியாக பயிற்சி எடுத்து எனக்கு கற்று கொடுத்தார்கள். என் அப்பா,அம்மா என்னை கஷ்டப்பட்டு பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்க விரும்பி அதற்காக நீட் தேர்வுக்கான பயணத்தை ஆரம்பித்தேன். பள்ளிப்படிப்பை முடித்ததும் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து என் படிப்பு திறனை மேம்படுத்தினேன். வீட்டிலும் என் குடும்பத்தினர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதன்படி நல்ல முறையில் தேர்வை நேர்மையாக எழுதினேன். என் முயற்சிக்கு 556 மதிப்பெண் கிடைத்தது. இது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. நீட் தேர்வுக்கு முயற்சிப்பவர்கள் படிக்கும் பாடங்களை மனப்பாடம் செய்வதை விட புரிந்து படிக்க வேண்டும். நம்முடைய ஞாபகத்திறனை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பதற்கான பயிற்சி செய்து பார்க்க வேண்டும். முயற்சி செய்து நம்பிக்கை இருந்தால் எல்லாராலும் நீட் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
பயப்பட வேண்டியதில்லை
நிதீஷ், அம்பிளிக்கை, ஒட்டன்சத்திரம் : நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்தேன். அங்கு சிறப்பான பயிற்சி அளித்தனர். குறிப்பாக செய்த தவறுகளை குறித்து வைத்து அதனை சரி செய்யும் வகையில் கொடுக்கப்படும் பயிற்சிகள் பயனளித்தன. நீட் தேர்வை கண்டு பயப்பட வேண்டியதில்லை. தொடர்ந்து விடாமல் பயிற்சி எடுத்தாலே தேர்ச்சி பெற்று விடலாம். கிரீன் பார்க் பள்ளி நிர்வாகம் நல்ல ஒத்துழைப்பு வழங்கினர்.
715 மதிப்பெண் பெற்றுள்ளேன். பெற்றோர் சக்திவேல் , சுபாஷினி இருவரும் மிகவும் உறுதுணையாக இருந்தனர். நாமக்கலில் பெற்றோருடன் தங்கி படித்தேன். என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி , பயிற்சி கவுன்சில் வெளியிடும் பாடப் புத்தகங்களை படித்ததே பெரும் உதவியாக இருந்தது. மாணவர்கள் பயம் கொள்ளாமல் அழுத்தமின்றி தொடர்ந்து படித்தால் வென்று விடலாம்.