/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா
முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா
முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா
முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா
ADDED : ஜூலை 25, 2024 06:49 AM

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்தார்.
இக்கோயில் விழா ஜூலை 13ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் இரவு மண்டகபடிதாரர் சிறப்பு வழிபாடு, பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு , முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 19ல் திருக்கல்யாணம், 21ல் தேரோட்டம் நடந்தது.
திருவிழாவில் இரவு முழுவதும் பல்லக்கில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. முத்துப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்ட பெருமாளை நான்கு ரத வீதிகளிலும் காத்திருந்த பக்தர்கள் அபிஷேகம், தீபாராதனை செய்து வழிப்பட்டனர். இதன் பின் அதிகாலையில் சுவாமி கோயில் திரும்பினார்.