Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தெருக்களில் ஓடும் சாக்கடை; நாய்களால் நித்தம் அவதி சிரமத்தில் பழநி நகராட்சி 7வது வார்டு மக்கள்

தெருக்களில் ஓடும் சாக்கடை; நாய்களால் நித்தம் அவதி சிரமத்தில் பழநி நகராட்சி 7வது வார்டு மக்கள்

தெருக்களில் ஓடும் சாக்கடை; நாய்களால் நித்தம் அவதி சிரமத்தில் பழநி நகராட்சி 7வது வார்டு மக்கள்

தெருக்களில் ஓடும் சாக்கடை; நாய்களால் நித்தம் அவதி சிரமத்தில் பழநி நகராட்சி 7வது வார்டு மக்கள்

ADDED : ஜூன் 20, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
பழநி: தெருக்களில் ஓடும் சாக்கடை,நாய்களால் நித்தம் அவதி , சேதமடைந்த அங்கன்வாடி மையம் என பழநி நகராட்சி 7 வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர்.

வடக்கு ரதவீதி, கீழ்வடம்போக்கி தெரு, மாசிமலை சந்து,திருநீலகண்டன் சந்து,மாடவீதி,கருப்புசாமி சந்து,குமரவேல் சந்து,தேவேந்திரன் சந்து,ரங்காச்சாரி சந்து,சேஷன் சந்து,வேணுகோபால சந்து, அஞ்சுகத்தம்மாள் சந்து ,ரங்கன் சந்து,உடுமலை ரோடு,தேரடி, பெரியநாயகி அம்மன் கோயில் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் நாயகி அம்மன் கோயில் உள்ளதால் விழாக்காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். விழா காலங்களில் அதிக பக்தர்கள் வருவதால் நகராட்சி சார்பில் வணிக வளாகம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இப்பகுதியில் நாய் தொல்லை மிக அதிகம் உள்ளது. காரமடை பகுதியில் கண்காணிப்பு கேமரா பழுதடைந்துள்ளது.

சாக்கடை துார்வாராது கழிவு கள் தேங்கி உள்ளது. வடக்கு ரத வீதியில் உள்ள அங்கன்வாடி மையமும் சேதமடைந்துள்ள நிலையில் குழந்தைகள் படிக்க அங்கன்வாடி மையம் இல்லை என்பது பெரும் குறையாக உள்ளது.

நாய்கள் துரத்துவதால் விபத்து


நாச்சிமுத்து, டிரைவர், வடக்கு ரத வீதி: இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. காரமடை பகுதியில் உடுமலை ரோட்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை.

கண்காணிப்பு கேமராக்களும் இல்லை சமுகவிரோத செயல்களும் அதிகம் நடை பெறுகிறது. தெரு நாய்களால் குழந்தைகள், முதியவர்கள் நடமாட இயலாமல் சிரமம் அடைகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளை தெருநாய்கள் கடித்து காயப்படுத்துகிறது. வாகன ஓட்டிகளையும் துரத்துகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

ரத வீதியில் ஓடும் கழிவு நீர்


அண்ணாதுரை, சிற்பி, அச்சு ஆபீஸ் மாரிமுத்து சந்து :வடக்கு ரத வீதியில் சாக்கடை துார்வாருதல் நடைபெறவில்லை. மழை காலங்களில் சாக்கடை நீர் ரத வீதியில் ஓடுகிறது. சுவாமி ஊர்வலம் நடைபெறும் பாதையில் அதனை மிதித்து செல்லும் சூழ்நிலை உருவாகிறது. கொசு தொல்லை அதிகம் உள்ளதால் டெங்கு அபாயமும் உள்ளது. ஜிகா திட்டத்தில் குடிநீர் தினமும் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

திருட்டு அச்சத்தில் மக்கள்


உதய பாரதி, விவசாயி, குமரவேல் சந்து: பொது குழாய் இல்லாததால் குடிநீரின்றி சிரமப்படுவோருக்கு ஜிகா த் திட்டத்தில் இணைப்பு வழங்க வேண்டும். உடுமலை ரோடு காரமடை பகுதியில் இரவு நேரங்களில் திருட்டு நடைபெறுகிறது. தெருவிளக்கு இல்லாததால் பெண்கள் நடமாட சிரமம் ஏற்படுகிறது. உடுமலை மெயின் ரோட்டில் உள்ள மரங்களால் புழுக்கள் அதிக அளவில் வீட்டிற்குள் வருகிறது. மின்கம்பங்களை உரசாமல் மரக் கிளைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் பெரியநாயகி அம்மன் கோயிலில் தண்ணீர் வெளியேற முடியாமல் சாக்கடை நீர் கோயிலுக்குள் செல்கிறது.

வணிகவளாகத்துக்கு நடவடிக்கை


சுரேஷ், கவுன்சிலர் (தி.மு.க.,): நகராட்சி சார்பில் விரைவில்தெருவிளக்குகள் சரி செய்யப்படும். உடுமலை ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையிடம் சாலையை அகலப்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளேன். மரங்களின் கிளைகளை முறையாக அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சியில் கோரிக்கை வைத்துள்ளேன்.

மாடத் தெருவில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆள் பற்றாக்குறையால் சாக்கடை துார்வார சிரமம் உள்ளது. தெப்பகுளம் பகுதியில் உயர் மின்விளக்கு ,தேரடி வடக்கு ரத வீதியில் வணிகவளாகம் , கண்காணிப்பு கேமரா ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெரியநாயகி அம்மன் கோயில் அருகே உள்ள சாக்கடையை சரி செய்ய தேவஸ்தானம் , நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us