/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சீனியர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் சீனியர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள்
சீனியர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள்
சீனியர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள்
சீனியர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள்
ADDED : ஜூலை 07, 2024 02:55 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சீனியர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது.
எஸ்.ஆர்.எம் பல்கலை., அணி, தாடிக்கொம்பு ஏ.ஆர். மருத்துவமனை பூப்பந்தாட்ட அணி, சென்னை லயோலா கல்லுாரி அணி, திருவொற்றியூர் பூப்பந்தாட்ட அணி, எண்ணுார் பூப்பந்தாட்ட அணி, ஜோலார்பேட்டை பூப்பந்தாட்ட அணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 28 அணிகள் பங்கேற்றது. எம்.எஸ்.பி.சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி ஆட்சி குழு தலைவர் மதிச்செல்வன் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் ஜி சுந்தர்ராஜன், எஸ்.கே.சி., குப்புசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஏ.டி.எஸ்.பி., மகேஷ், சமூக ஆர்வலர் காஜா மைதீன், திருவருட் பேரவை இணைச்செயலர் திபூர்சியஸ் பங்கேற்றனர். தமிழக பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.
முதலிடம் பெறும் அணிக்கு தேசிய நல்லாசிரியர் ரத்தின பாண்டியன் நினைவு சுழற் கோப்பையும் ரூ.12 ஆயிரம் ரொக்க பரிசும், 2ம் இடம் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம், 3ம் இடம் பெறும் அணிக்கு ரூ.8000, 4ம் பெறும் இடம் பெறும் அணிக்கு ரூ.6000 ம் பரிசுகளாக வழங்கப்படுகிறது.