/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பையால் பாழாகும் 'கொடை' பாம்பே சோலை குப்பையால் பாழாகும் 'கொடை' பாம்பே சோலை
குப்பையால் பாழாகும் 'கொடை' பாம்பே சோலை
குப்பையால் பாழாகும் 'கொடை' பாம்பே சோலை
குப்பையால் பாழாகும் 'கொடை' பாம்பே சோலை
ADDED : ஜூலை 07, 2024 02:56 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பாம்பே சோலையில் கட்டுமான கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதித்துள்ளது. வனத்துறை கண்டுகொள்ளாமலிருப்பதால் அவல நிலை நீடிக்கிறது.
பாம்பார்புரம் செல்லும் மெயின் ரோட்டோரம் சோலை மரங்கள் அடர்ந்த பாம்பே சோலை ஏரிக்கு அருகில் உள்ளது.
அரிய வன உயிரினங்களின் வாழ்விடமாக பசுமை நிறைந்த பகுதியாக உள்ளது.
இப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பின் போது நுாற்றுக்கணக்கான பறவை இனங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிந்தது.
இச்சூழலில் நகரில் இடிக்கப்படும் கட்டுமான கழிவு, ஹோட்டல் கழிவு, பிளாஸ்டிக் குப்பைகள் இப்பகுதியில் செல்லும் இணைப்பு ரோடு வழியாக தாராளமாக கொட்டப்பட்டு வனப்பகுதியில் குவிந்தது.
இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்தது. மேலும் இப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் இதில் கொட்டப்படும் கழிவு உணவுகளை உண்பதால் செரிமான கோளாறுகளால் அவ்வப்போது பலியாகின்றன.
வனத்துறையும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாதே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி குப்பைகளால் பாழ்பட காரணமாக உள்ளது.
வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட பகுதியில் இனிவரும் காலங்களில் குப்பைகள் கொட்டப்படாமல் பாதுகாக்கவும், தற்போதுள்ள குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.