/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி உதவி 49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி உதவி
49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி உதவி
49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி உதவி
49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி உதவி
ADDED : ஜூன் 16, 2024 06:57 AM
திண்டுக்கல்: அமைப்புசாரா, கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள் என 18 நலவாரியங்கள் வாயிலாக மாவட்டத்தில் உள்ள 49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என 18 நல வாரியங்கள் உள்ளன. தொழிலாளர் நல வாரியங்கள் சார்பில் 35,277 பேருக்கு ரூ.5.21 கோடி மதிப்பில் கல்வி உதவித் தொகை, 602 பேருக்கு ரூ.74.77 லட்சம் திருமண உதவித்தொகை, 12 பேருக்கு ரூ.6,000 மதிப்பில் கண் கண்ணாடி, 645 பேருக்கு ரூ.2.12 கோடி மதிப்பில் மரணம் நிவாரணத் தொகை, 18 பேருக்கு ரூ.18.30 லட்சம் மதிப்பில் விபத்து மரணம்நிவாரணத் தொகை, 13,302 பேருக்கு ரூ.47.59 கோடி மதிப்பீட்டில் மாதாந்திர ஓய்வூதியம் என 49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.