/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
ரூ.4.66 கோடி கையாடல்: சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
ADDED : ஜூலை 30, 2024 05:48 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் 4.66 கோடியை கையாடல் செய்த இளநிலை பொறியாளர் சரவணனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றிய இவர் மக்கள் வரிப்பணம் 4.66 கோடியை கையாடல் செய்தார்.
இவரை மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தது.
அதன்படி போலீசார் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மாநகராட்சி அலுவலர்கள் சிலர், வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பிருப்பது தெரிய வர, இதன் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் போலீசார் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர்.