/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நிலக்கோட்டையில் வீடுகளில் ரூ.13 லட்சம், நகை கொள்ளை நிலக்கோட்டையில் வீடுகளில் ரூ.13 லட்சம், நகை கொள்ளை
நிலக்கோட்டையில் வீடுகளில் ரூ.13 லட்சம், நகை கொள்ளை
நிலக்கோட்டையில் வீடுகளில் ரூ.13 லட்சம், நகை கொள்ளை
நிலக்கோட்டையில் வீடுகளில் ரூ.13 லட்சம், நகை கொள்ளை
ADDED : ஜூன் 08, 2024 05:50 AM
நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து ரூ. 13 லட்சம் பணம், நகை கொள்ளை போனது.
நிலக்கோட்டை பகவதி அம்மன் கோயில், காளியம்மன் கோயில் தெருக்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டி இருந்த வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது. சத்தம் கேட்டு விழித்த அப்பகுதியினர் கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றபோது தப்பினர். 5க்கு மேற்பட்ட வீடுகளில் பூட்டு உடைத்தது தெரிந்தது.
போலீஸ் விசாரணையில் பகவதி அம்மன் கோவில் தெரு சுந்தரம் 65, வீட்டில் வைத்திருந்த ரூ. 13 லட்சம், 2 பவுன் நகை கொள்ளை போனது . மேலும் பெரும்பாலான வீடுகள் காலியானவை என்பதால் பெரிய அளவிலான கொள்ளை நடக்கவில்லை.கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.