/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி கிரி வீதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம்; உயர்நீதிமன்றம் உத்தரவு பழநி கிரி வீதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
பழநி கிரி வீதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
பழநி கிரி வீதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
பழநி கிரி வீதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 07, 2024 11:11 PM

மதுரை : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற 2018 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தும், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவ்வப்போது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பிக்கிறது.
நேற்று நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
கோயில் மற்றும் அரசு தரப்பு: அன்னசெட்டி மடம் அருகே 120 பேர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். அங்கிருந்து அவர்களை அகற்றி மாற்று இடம் தருவதாக உறுதியளித்தோம். வெளியேற மறுக்கின்றனர். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரி வீதியை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைப்பதை யாரும் தடுக்கக்கூடாது. விசாரணை ஜூன் 24 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.