திண்டுக்கல், நத்தம் பகுதியில் மழை
திண்டுக்கல், நத்தம் பகுதியில் மழை
திண்டுக்கல், நத்தம் பகுதியில் மழை
ADDED : ஜூலை 14, 2024 03:52 AM
நத்தம், : திண்டுக்கல், நத்தம் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன் தினம் இடி,மின்னலுடன் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்தது.
நத்தம், கோபால்பட்டி சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதலே கடுமையான வெயில் வாட்டியது.
மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இதன் பின் சில்லென இதமான காற்று வீச மழை பெய்ய துவங்கியது.
நேரம் செல்ல பலத்தமழையாக உருவெடுத்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இது போல் திண்டுக்கல் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.