/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குரும்பபட்டி கோயில் விழாவில் பூக்குழி குரும்பபட்டி கோயில் விழாவில் பூக்குழி
குரும்பபட்டி கோயில் விழாவில் பூக்குழி
குரும்பபட்டி கோயில் விழாவில் பூக்குழி
குரும்பபட்டி கோயில் விழாவில் பூக்குழி
ADDED : ஜூன் 04, 2024 06:21 AM

செந்துறை : நத்தம் செந்துறை- குரும்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோயில் விழா மே 26ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை அம்மன் வானவேடிக்கைகளுடன் கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்கள் பொங்கல், அக்னிசட்டி, முளைப்பாரி, பால்குடம், மாவிளக்கு என நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று மாலை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
ஏற்பாடுகளை குரும்பபட்டி ஊர் மக்கள் செய்திருந்தனர்.