Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ADDED : ஜூன் 20, 2024 05:28 AM


Google News
திண்டுக்கல்: பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம் , காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில்,கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயில் சிவன் சன்னிதி,ரயிலடி சித்தி விநாயகர் கோயில் சிவன் சன்னிதி, 108 விநாயகர் கோயில் சிவன் சன்னதி உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னிதியில் சிறப்பு அபிேஷகம் , தீபராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலவர், உற்சவர், நந்திக்கு பால், இளநீர், மஞ்சள்நீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. தர்மத்துப்பட்டி: மல்லேஸ்வரர் கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், பிரதோஷ அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னிதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. நவாமரத்துப்பட்டி புதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. விருப்பாச்சி தலையயூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

வடமதுரை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பழநி : கோதைமங்கலம் பெரிய ஆவுடையார் கோயில், அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், பழநி இடும்பன் கோயில், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில், வேளீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு அலங்காரம் நடந்தது. மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை, சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது. நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, வில்வம், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. செந்துறை மங்களப்பட்டி மங்கள விநாயகர் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கோபால்பட்டி: கபாலீஸ்வரர் கோயில் , சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி ரூபிணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாக பூஜை, தீபாராதனை , அன்னதானம் நடந்தது. வேம்பார்பட்டி குரு முத்தீஸ்வரர் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், தவசிமடை சிவன் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us