Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ADDED : ஜூலை 20, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
கன்னிவாடி : கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை நடந்தது.

மூலவர், ஓம்காரநந்திக்கு பால், இளநீர்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் பங்கேற்றனர்.

கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில்,காரமடை ராமலிங்க சுவாமி கோயில்,சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில்பிரதோஷ அபிஷேகம், தீபாராதனைகள்நடந்தது.

-பழநி : பழநி கோதைமங்கலம் பெரிய ஆவுடையார் கோயில்,அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், பழநிஇடும்பன் கோயில், கலையம்புத்துார் கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயில், சன்னதி வீதி வேளீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் : காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னிதியில் சிவலிங்கம், நந்திக்கு அபிஷேகம் , அலங்காரத்துடன் தீபாரதனை நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில்,அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் , விருப்பாச்சி தலையயூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயிலில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜை , அலங்காரம், தீபாராதனைநடந்தது. அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வெள்ளிக்கவசம் சாத்த சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது. நந்திக்கு 16 வகையான அபிஷேகம் , தீபாராதனை நடந்தது.

ஆவிளிப்பட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர் கோயில், கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோயில் , சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி ரூபிணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, அன்னதானமும் நடந்தது. வேம்பார்பட்டி குரு முத்தீஸ்வரர் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், தவசிமடை சிவன் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.

வடமதுரை:மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us