ADDED : ஜூலை 21, 2024 05:19 AM
திண்டுக்கல்: ஒவ்வொரு பவுர்ணமி போதும் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
அதன்படி பவுர்ணமியை முன்னிட்டு ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கிரிவலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 3 கி.மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவாலயங்கள் உட்பட 22 திருக்கோயில்களிலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.