ADDED : ஜூன் 21, 2024 05:10 AM
ரயில் மோதி பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் எரியோடு ரயில்வே வழித்தடங்களுக்கு நடுவில் நேற்று 35 மதிக்கதக்க ஆண் ஒருவர் கோவை டூ நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். திண்டுக்கல் அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
நடுரோட்டில் கவிழ்ந்த லாரி
கன்னிவாடி: கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து கோவில்பட்டிக்கு தீக்குச்சி பண்டல் ஏற்றிய லாரி நேற்று முன்தினம் புறப்பட்டது. விருதுநகர் மாவட்டம் பேரையூரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் 34, லாரியை ஓட்டி வந்தார். நேற்று ஒட்டன்சத்திரம் -செம்பட்டி ரோடு தருமத்துப்பட்டி அருகே லாரி வந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே சென்டர் மீடியனில் மோதி லாரி கவிழ்ந்தது. டிரைவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போராடிய மூவர் மீது வழக்கு
தாடிக்கொம்பு: திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் அவதியடைந்தனர். முறையான பஸ் வசதி கேட்டு கள்ளிப்பட்டி வலது கம்யூ.,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பாலமுருகன், அதே பொறுப்பில் உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி மணிகண்டன்,டி.ஒய்.எப்.ஐ., மாவட்ட செயலாளர் வத்தலகுண்டு முகேஷ் உள்ளிட்டோர், பள்ளி மாணவர்களை திரட்டி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அரசு அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் நடத்திய, நிர்வாகிகள் பாலமுருகன், மணிகண்டன், முகேஷ் மீது தாடிக்கொம்பு எஸ்.ஐ., பூபதி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.