/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம் மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம்
மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம்
மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம்
மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம்
ADDED : ஜூன் 21, 2024 02:28 AM
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பழைய வீட்டை மராமத்து பணி பார்க்கும் போது மர்ம பொருள் வெடித்ததில் கட்டட தொழிலாளி உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
அய்யம்பாளையம் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் 56. இவர் குடியிருந்து வரும் வீட்டை பழுது பார்த்து வந்தார். எம். வாடிப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பழனிச்சாமி 45, உதவியாளர்கள் சூர்யா 34, ரேவதி 40, ஆகியோர் தரைத்தளத்தை புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தரையின் அடிப்பகுதியிலிருந்து மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் சூர்யா, ரேவதி, பழனிச்சாமி காயமடைந்தனர். சிகிச்சைக்காக வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.