/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல் நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதியில்லை திண்டுக்கல் நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதியில்லை
திண்டுக்கல் நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதியில்லை
திண்டுக்கல் நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதியில்லை
திண்டுக்கல் நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதியில்லை

திண்டுக்கல் நகரில் எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்புகளாக உள்ளதே...
ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்றி வருகிறோம். இதற்கென புதிதாக இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரின் எந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் உடனே அகற்றப்படும். போலீசாருடன் இணைந்து ஆக்கிரமிப்புகள் இல்லாத
மாநகராட்சி அனுமதி பெறாமல் ஆவின் பூத்கள் செயல்படுகிறதே...
ஆவின் பூத்கள் மாநகராட்சி பகுதியில் வைக்க வேண்டுமானால் மாநகராட்சியிலும் அனுமதி பெற வேண்டும். மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் பல ஆவின் பூத்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்டவர்களிடம் கூறி உள்ளோம். கமிஷனர் உத்தரவில் அனுமதி பெறாத ஆவின் பூத்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை நேரங்களில் பழைய வீடுகள்,கட்டடங்கள் இடிந்து விழுகிறதே...
திண்டுக்கல் நகரில் பெய்த கோடை மழை நேரங்களில் வீடுகள் இடிந்தது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நகரில் உள்ள பழைய,இடியும் நிலையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு கட்டடங்களை இடிக்க வலியுறுத்தி நோட்டிஸ் வழங்கப்பட்டது. வெளி மாநிலம்,நாடுகளில் வசிப்பவர்களின் வீடுகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். இடியும் நிலையிலிருந்த பல கட்டடங்கள் மாநகராட்சி தரப்பில் இடிக்கப்பட்டது.
நகரில் அனுமதி பெறாத கட்டடங்கள் அதிகரிக்கிறதே...
புதிய கட்டடங்கள்,வீடுகள்,வணிக நிறுவனங்கள் கட்டுவோர் முறையாக எங்களிடம் அனுமதி பெற்று கட்டடங்களை கட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் புதிதாக நகரில் கட்டடங்கள் வேலை நடக்கும் போதெல்லாம் நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டு முறையான அனுமதி சான்றிதழ்கள் வைத்துள்ளார்களா என ஆய்வு செய்வோம். இதுவரை அனுமதி பெறாத கட்டடங்கள் யாரும் கட்டவில்லை.
எங்கு பார்த்தாலும் பிளக்ஸ் பேனர்களா உள்ளதே...
பிளக்ஸ் பேனர்கள் ஒரு சிலர் மட்டுமே அனுமதி வாங்கி வைத்துள்ளனர், அனுமதி பெறாமல் வைத்திருக்கும் பேனர்களை அடிக்கடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். இருந்தபோதிலும் ஒருசிலர் சட்டத்தை மீறுகின்றனர். அவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பல பகுதிகளில் பேனர்களால் விபத்துகள் ஏற்படுவதால் திண்டுக்கல் நகரில் இனிமேல் பேனர்கள் வைக்க அனுமதியில்லை.
மழைநீர் சேகரிப்பு திட்டம் பயன்பாட்டில் இருக்கிறதா...
மழைநீர் சேகரிப்பு என்பது முக்கியமான செயலாக உள்ளது. தற்போதைய நவீன உலகில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தடுக்கும் வகையில் மக்களிடம் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். புதிதாக கட்டப்படும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பது குறித்து விளக்கமும் கொடுக்கிறோம்.
பள்ளிக்கட்டடங்களின் தரம் மோசமாக உள்ளதே..
மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் எல்லா பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகள்,கழிப்பறைகள் போன்றவைகளின் கட்டடங்களை ஆய்வு செய்து அதன் உறுதித்தன்மை குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். தரம் குறைவாக இருந்தால் கட்டடங்களை புதிதாக கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.