/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மலைக்குன்று மரங்களை வெட்டி வெள்ளைக்கற்கள் எடுப்பு பாதுகாக்க கோரி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் கதறல் மலைக்குன்று மரங்களை வெட்டி வெள்ளைக்கற்கள் எடுப்பு பாதுகாக்க கோரி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் கதறல்
மலைக்குன்று மரங்களை வெட்டி வெள்ளைக்கற்கள் எடுப்பு பாதுகாக்க கோரி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் கதறல்
மலைக்குன்று மரங்களை வெட்டி வெள்ளைக்கற்கள் எடுப்பு பாதுகாக்க கோரி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் கதறல்
மலைக்குன்று மரங்களை வெட்டி வெள்ளைக்கற்கள் எடுப்பு பாதுகாக்க கோரி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் கதறல்
ADDED : ஜூன் 07, 2024 06:55 AM

வடமதுரை: வடமதுரை அருகே பல ஆண்டுகளாக அரசின் சொத்தாக இருந்த மலைக்குன்று தற்போது தனியார் இடம் எனக்கூறி அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு வெள்ளைக்கற்கள் எடுக்கும் பணி துவங்கி உள்ளதை தடுக்க கோரி,வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜனிடன் மக்கள் கண்ணீருடன் கதறியப்படி கோரிக்கை விடுத்தனர்.
அய்யலுார் எரியோடு ரோட்டில் கொம்பேறிபட்டி பிள்ளையார்நகர் அருகில் சிறிய மலைக்குன்று உள்ளது. இங்கு ஏராளமான மரங்கள், தாவர இனங்கள் உள்ளன. பிலாத்து கிராமப்புலத்தின் கீழ் வரும் இப்பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசின் சொத்தாக இருந்தது , அப்பகுதியினர் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு பயன்பெற்றனர். வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் இவ்விடத்தை தனியார் பெயருக்கு ரகசியமாக மாற்றிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இங்கு தனியார் நிறுவனம் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, வெள்ளைக்கற்களை வெட்டி எடுக்கும் பணியை துவங்கி உள்ளது. அதிருப்தியான அப்பகுதியினர் இப்பிரச்னையில் தலையிட்டு மலைக்குன்றை காப்பாற்ற வேடசந்துார் தி.மு.க.,எம்.எல்.ஏ.,காந்திராஜனிடம் கண்ணீருடன் கதறியப்படி கோரினர்.
எம்.எல்.ஏ., கூறியதாவது: மக்கள் கண்ணீருடன் தெரிவித்த தகவலையடுத்து வருவாய்த்துறையின் பல மட்ட அதிகாரிகளிடம் விபரம் கேட்டும் சரியாக விளக்கம் தர யாரும் முன்வர மறுக்கின்றனர். இப்பிரச்னையில் நீதிமன்ற உதவியை நாட இருப்பதாகவும் அதற்கு உதவியும் கேட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீர்வுக்கு முயற்சிக்கிறேன் என்றார்.