/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம் வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம்
வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம்
வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம்
வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம்
ADDED : ஜூன் 07, 2024 06:56 AM

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பல்வேறு மரங்களும், அரிய வகை மூலிகைகளும் உள்ளன. இதோடு யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு , பன்றிகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் மலை அடி வாரத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை நாசம் செய்கிறது. வனப்பகுதி யொட்டிய விளைநிலங்களில் தென்னை, வாழை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி வரும் காட்டுப்பன்றிகள் விளை பொருட்களை சேதம் செய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைகின்றனர். அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகளை சிரமம் அடைகின்றனர்.
யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வதோடு விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது.
சில நாட்களாக பழநி அருகே வரதமாநதி அணை, கோம்பைபட்டி, ஆயக்குடி, பாலாறு பொருந்தலாறு அணை பகுதிகளில் யானை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
காட்டுப்பன்றிகள் வனப்பகுதி அருகில் மட்டுமில்லாமல் ஆற்றுப்பகுதி புதர்களில் மறைந்திருந்து இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து விலை பொருட்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பு அடைகின்றனர். இதன் மீது வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.