/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விடாது துரத்தும் நாய்கள், வீதியெங்கும் மாடுகள் அவதியில் திண்டுக்கல் 2வது வார்டு மக்கள் விடாது துரத்தும் நாய்கள், வீதியெங்கும் மாடுகள் அவதியில் திண்டுக்கல் 2வது வார்டு மக்கள்
விடாது துரத்தும் நாய்கள், வீதியெங்கும் மாடுகள் அவதியில் திண்டுக்கல் 2வது வார்டு மக்கள்
விடாது துரத்தும் நாய்கள், வீதியெங்கும் மாடுகள் அவதியில் திண்டுக்கல் 2வது வார்டு மக்கள்
விடாது துரத்தும் நாய்கள், வீதியெங்கும் மாடுகள் அவதியில் திண்டுக்கல் 2வது வார்டு மக்கள்

செடிகளை நாசம் செய்கிறது
ஸ்ரீதர், ஆர்.எம்.காலனி: மாடுகள் அதிகளவில் தெருக்களில் உலாவுகின்றன. நட்டு வைத்திருக்கும் செடிகளை எல்லாம் நாசம் செய்து விடுகிறது. குறிப்பாக குப்பையை கிளறி ரோட்டில் கொண்டு வந்து விடுகின்றன. ஆர்.எம்., காலனி பிரதான ரோட்டில் வந்து மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வெயில் அடிக்க ஆரம்பித்தால் ரோட்டோர நிழற்பகுதிகளில் கும்பலாக மாடுகள் வந்து விடுவதால் அப்பகுதியை கடப்பதே பெரும் பாடாய் இருக்கிறது. மாடுகள் முட்டி சிலர் காயமடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
நிர்வாகத்திடம் தெரிவித்தும் நோ யூஸ்
ேஹமலதா, மேற்கு அசோக் நகர் : குப்பைத் தொட்டிகள் இல்லாததால் பெரும் சிரமமாக உள்ளது.
நாய்கள் அட்டகாசம் அதிகம்
ஸ்ரீதர், வண்டிபாதை ரோடு :நாய்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு அச்சமாக வாழ்கிறோம். எத்தனையோ முறை கூறிவிட்டோம். தெரு நாய்களை கட்டுப்படுத்தவே முடிவதில்லை. குப்பை, சாக்கடைகளில் புரண்டு விட்டு தெருக்களில் வருவதால் நோய் தொற்று சூழலும் ஏற்பட்டுள்ளது.
பல முறை பேசிவிட்டேன்
கணேசன், கவுன்சிலர் ( மா.கம்யூ.,) : மாடு, நாய்கள் பிரச்னைகள் உள்ளது. பல முறை நானும் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு , மாமன்ற கூட்டத்திலும் பேசியிருக்கிறேன். மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிந்தே இந்த விவகாரம் நடக்கிறது. மாடுகளின் உரிமையாளர்கள் யார் என மாநகராட்சிக்கு தெரிந்தும் கண்டும் காணாததுபோல் இருக்கின்றனர். கலெக்டர் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும். குப்பை விவகாரத்தில் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கின்றனர்.