/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நீர் வரத்தால் உயரும் ஆத்துார் நீர்த்தேக்கம் நீர் வரத்தால் உயரும் ஆத்துார் நீர்த்தேக்கம்
நீர் வரத்தால் உயரும் ஆத்துார் நீர்த்தேக்கம்
நீர் வரத்தால் உயரும் ஆத்துார் நீர்த்தேக்கம்
நீர் வரத்தால் உயரும் ஆத்துார் நீர்த்தேக்கம்
ADDED : ஜூன் 09, 2024 04:46 AM
ஆத்துார், : ஆத்துார் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் துவங்கி உள்ளது.
ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் , 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது 2023ல் மூன்று முறை நிரம்பி ( 24 அடி) மறுகால் பாய்ந்தது.
நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டம் மட்டுமே தொடர தற்போது இரு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. கூழையாற்று ஓடையிலும் தண்ணீர் வரத்து துவங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி நீர்த்தேக்க பகுதியில் ஒரு மி.மீ., மழை பதிவாக நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்து உள்ளது.