/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள் வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள்
வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள்
வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள்
வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள்

கேமரா பொருத்துவது அவசியம்
சுப்பிரமணி, தெற்கு அண்ணா நகர் : தெற்கு அண்ணா நகர் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பிற்காக தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யவில்லை .இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டியது அவசியம்.
அச்சத்தில் பெண்கள்
புண்ணிய சிவா ,பாரதிதாசன் சாலை:பாரதிதாசன் சாலை பகுதியில் இரவு நேரத்தில் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பாரதிதாசன் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைகின்றனர். போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. வெளி நபர்கள் நடமாட்டத்தால் பெண்கள் அச்சத்துடன் உள்ளனர்.
நோய் தொற்று அபாயம்
கணேசன், பாளையம்: நாய், பன்றிகள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது .வையாபுரி குளத்து பகுதியில் பொதுப்பணித்துறையினர் வேலி அமைக்க வேண்டும். குளத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
நாய் தொந்தரவு குறைகிறது
சுதா , கவுன்சிலர் (தி.மு.க.,) : வார்டு பகுதியில் குப்பை முறையாக அள்ளப்படுகின்றன. தெருவிளக்கு பிரச்னைகள் எதுவும் இல்லை.