ADDED : ஜூலை 08, 2024 12:12 AM
பழநி: பழநி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி அதிக அளவில் உள்ளது.
2024ற்கான நெல் பயிர் காப்பீடு செலுத்த ஜூலை 31 கடைசி நாள் ஆகும். நெல் பயிரை காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 712 செலுத்தி ரூ.35,600 காப்பீட்டுத் தொகை பெறலாம். இதுகுறித்த விவரங்கள் பெற சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி கணக்கு விவரங்களுடன் பழநி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.