ADDED : ஜூன் 25, 2024 06:08 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டிற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வருகின்றன.
இவற்றில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றனர். டவுன் பஸ்கள் நிற்கும் பகுதிக்கு வர நடைபாதை முழுவதையும் வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வேகமாகச் சென்று பஸ்சை பிடிக்கும் நிலையில் உள்ள பயணிகள் பாதிக்கின்றனர். பயணிகளை அவதிக்கு உள்ளாக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.