/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிரிக்கெட் லீக்; விருதுநகர் அணி வெற்றி கிரிக்கெட் லீக்; விருதுநகர் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்; விருதுநகர் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்; விருதுநகர் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்; விருதுநகர் அணி வெற்றி
ADDED : ஜூன் 25, 2024 06:08 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 20ல் தொடங்கியது.
50 ஓவர்கள் அடிப்படையில் ஒரு நாள் போட்டிகளாக நடக்கம் முதல் சுற்று போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., ஸ்ரீவீ,ஆர்.வி.எஸ்., ஆகிய கல்லுாரிகளில் நடக்கின்றன. முதல் நாள் போட்டிகளில் நெல்லை, தேனி அணிகள் வெற்றி பெற்றது.
2ம் நாளான ஜூன் 21ல் நடந்த போட்டியில் தென்காசி அணி விருதுநகர் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த தென்காசி 36.4 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தது.
அபிஷேக்,பிரனீஷ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த விருதுநகர் அணி 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்த மற்றொரு போட்டியில் நெல்லை,தேனி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 48.2 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. அபினவ் கணேஷ் 58, அபுபக்கர் சித்திக் 35 ரன்களும் எடுத்தனர்.
ஸ்ரீவத்சாலன் 4, அபிமன் சுந்தர் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். சேசிங் செய்த தேனி அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 79 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அபிமன் சுந்தர் 44 ரன்களும், ஸ்ரீதர் 3 விக்கெட் எடுத்தனர்.
3ம் நாளன்று ஸ்ரீவீ மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் விருதுநகர், திண்டுக்கல் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த விருதுநகர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.
நிரஞ்சன் வீர் 82 ரன்கள் எடுத்தார், சேசிங் செய்த திண்டுக்கல் அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சஞ்சய் பாலாஜி 72(நாட் அவுட்) தர்ஷ்வின் 53(நாட் அவுட்) சசிகுமார் 32 ரன்கள் எடுத்தனர். அபிேஷக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்
பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் தென்காசி அணி தேனி அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த தென்காசி அணி 34.5 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தது. அபிமன் சுந்தர் 6, விஜயசீலன் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
சேசிங் செய்த தேனி அணி 8.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4ம் நாளன்று நடந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல், தேனி அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. தனிஷ் 40, சஞ்சய் பாலாஜி 56 (நாட் அவுட்), தர்ஷ்வின் 50 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர்.
சேசிங் செய்த தேனி அணி 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 82 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அபிமன் சுந்தர் 38 ரன்களும், தனிஷ் 4 விக்கெட் எடுத்தார்.
மற்றொரு போட்டியில் தென்காசி, நெல்லை அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. ஜெரோம் ஆடம் 112 பந்துகளில் 117 ரன்கள் அடித்து அசத்தினார். ரேஹான் அபினவ் 31 ரன்கள் எடுத்தார்.
சேசிங் செய்த தென்காசி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெல்லை அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடக்கும் போட்டிகளில் திண்டுக்கல் அணி தேனி அணியையும், நெல்லை அணி விருதுநகர் அணியையும் எதிர்கொள்கிறது.