ADDED : ஜூலை 08, 2024 12:09 AM
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பெரும்பாறையில் சில்லறை மது விற்பனை படுஜோராக நடப்பதை போலீசார் கண்டு கொள்வதில்லை.
கொடைக்கானல் தாண்டிக்குடி உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட மலை கிராமங்களில் ஆளும் கட்சி,போலீசார் ஆசியுடன் சில்லறை மது விற்பனை படு அமோகமாக நடந்தது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் பலியாகியதைதொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சில்லறை மது விற்பனையை நிறுத்தப்பட்டது. இருந்த போதும் மணலுார் ஊராட்சி பெரும்பாறை பகுதியில் படுஜோராக சில்லறை மது விற்பனை ஜோராக நடக்கிறது. குறைந்த விலைக்கு வாங்கப்படும் மது பாட்டில்கள் ஒன்று ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் பெயரளவிற்கு ரோந்து செல்லும் தாண்டிக்குடி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் பெரும்பாறையில் நடக்கும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.