/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழா- ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழா-
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழா-
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழா-
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழா-
ADDED : ஜூன் 08, 2024 05:58 AM

நத்தம் : நத்தம் கருத்தலக்கம்பட்டி புதுார் வடகாட்டான் சுவாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்தலக்கம்பட்டி புதுார் வடகாட்டான் சுவாமி கோவில் திருவிழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்தாண்டு திருவிழா மே 28 ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை வடகாட்டான் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 200-க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அண்டாக்களில் உணவு சமைத்தனர்.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாணவேடிக்கை , தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலமாக முத்தாலம்மன் கோவிலை சென்றடைந்தது.