/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வழக்கறிஞர் மீது தாக்குதல் கைது செய்ய முற்றுகை வழக்கறிஞர் மீது தாக்குதல் கைது செய்ய முற்றுகை
வழக்கறிஞர் மீது தாக்குதல் கைது செய்ய முற்றுகை
வழக்கறிஞர் மீது தாக்குதல் கைது செய்ய முற்றுகை
வழக்கறிஞர் மீது தாக்குதல் கைது செய்ய முற்றுகை
ADDED : ஜூன் 09, 2024 03:58 AM

குஜிலியம்பாறை, : குஜிலியம்பாறை ஆர்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் 35. தனது நிலத்தை பாகப்பிரிவினை செய்து பத்திரப்பதிவு செய்ய குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார்.
அப்போது அங்கே வந்த உறவினர் வேலுச்சாமி ,ராஜேஷ் இடையே பத்திரப்பதிவு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. ராஜேஷ் குஜிலியம்பாறை போலீசில் புகார் செய்தார்.
குஜிலியம்பாறை போலீசார் வேலுச்சாமி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்களை உடனடியாக கைது செய்யவில்லை. இவர்களை கைது செய்யக்கோரி வேடசந்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குஜிலியம்பாறை போலீஸ் ஸ்டேஷன் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., துர்கா தேவி , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.