/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகள்; பொதுமக்கள் பீதி ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகள்; பொதுமக்கள் பீதி
ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகள்; பொதுமக்கள் பீதி
ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகள்; பொதுமக்கள் பீதி
ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகள்; பொதுமக்கள் பீதி
ADDED : ஜூன் 16, 2024 06:59 AM

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை கண்டு நோய் தொற்று ஏற்படுமோ என்ற பீதியில் கிராம மக்கள் உள்ளனர்.
தாடிக்கொம்பு லட்சுமணன் பட்டி அய்யம்பாளையம் ரோட்டோரத்தில் நேற்று முன்தினம் கன்டெய்னர் லாரி ஒன்று நின்றுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் எதற்காக காட்டுப் பகுதியில் நிற்கிறீர்கள் என கேட்டுள்ளனர். லாரி கிளீனர் வழி மாறி வந்துவிட்டோம். லாரியை திருப்புவதற்காக நிற்கிறோம் என கூறி உள்ளார்.
இந்நிலையில் அங்கு நேற்று காலை வந்த மக்கள் மருத்துவமனையின் வேஸ்ட் பொருட்களை கொட்டி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரத்தக்கரையுடன் கூடிய கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் என மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது என்கின்றனர் மக்கள். இதேபோல் மற்றொரு பகுதியில் கழிவு பொருட்கள் கொட்டப்பட்ட நிலையில் கொட்டியவர்களே தீ வைத்து சென்றுள்ளனர். இதனால்அப்பகுதியில் கரும் புகையாக மாறி உள்ளது .இதனால் தொற்று பரவுமோ என்ற நிலையில் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இப்பகுதியில் கழிவு பொருட்கள் கொண்டு வந்து கொட்டிவய்களை கண்றிந்து நடவடிக்கை எடுப்பதோடு,மேலும் இது போன்று கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம்,வேடசந்துார் போலீசார் முன் வர வேண்டும் .
கேமரா மூலம் ஆய்வு
தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சந்தனம்மா கூறியதாவது : தனியார் நிலத்தில் லாரிகளில் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டி உள்ளனர். பொல்யூஷன் கெமிக்கல் டெஸ்ட் எடுப்பவர்கள் வர உள்ளனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியவர்களை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கப்படுகிறது என்றார்.