ADDED : ஜூன் 16, 2024 07:00 AM

திண்டுக்கல்: உலக ரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஜி.டி.என்., செவிலியர் கல்லுாரி, இந்திய மருத்துவர்கள் சங்க திண்டுக்கல் கிளை இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது.
கல்லுாரி தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை ரத்தினம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் வசந்தாமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ராஜ்குமார், லலித்குமார், பிரேம்நாத் கலந்து கொண்டனர். ஜி.டி.என்., மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் பிலோமினாள் புனித செல்வி பங்கேற்றார். மாணவர்கள் ஆர்முடன் ரத்ததானம் அளித்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி விரிவுரையாளர் தேன்மொழி நன்றி கூறினார்.