ADDED : ஜூலை 29, 2024 06:33 AM

நத்தம்: நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோயிலில் வாராகி அம்மன் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று 48வது நாள் மண்டல பூஜை நடந்தது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமம், பூஜைகள் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாராகி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், இளநீர், பன்னீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் திரவிய அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மகா வாராகி கைங்கர்ய சபா நிர்வாகிகள் செய்தனர்.