ADDED : ஜூலை 21, 2024 05:18 AM
திண்டுக்கல்: இந்திய மருத்துவம் , ஓமியோபதி துறை, மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை,தமிழ்நாடு சிறை துறை இணைந்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் சித்த மருத்துவ முகாம் நடந்தது. மன ஆரோக்கியத்திற்கு யோகாசனம் மூச்சுப் பயிற்சி ,தியானம் செயல்முறை விளக்கம், ஆயுஷ் மருத்துவத்தின் சிறப்பம்சங்கள், பாதுகாப்பான சிகிச்சை முறைகள் குறித்து கைதிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இயற்கை யோகா அரசு டாக்டர் தேவராஜ், சித்த மருத்துவ டாக்டர்கள் ஜெயச்சந்திரன் ,பாலமுருகன் தலைமை வகித்தனர்.
சுகாதார கல்வியாளர் முருகன் ,பாலி கிளினிக் கவுதம் ஆகியோர் கிப்லின் நுரையீரல் செயல்திறன் அறியும் கருவி மூலம் நோயாளிகளுக்கு நுரையீரல் பரிசோதனை செய்தனர். இதில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கைதிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் , துணை சிறை அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.